\
மும்பை: கனமழை காரணமாக ரயில் தடங்கள் மூழ்கின; ரயில் சேவைகள் நிறுத்தம்

மும்பை: கனமழை காரணமாக ரயில் தடங்கள் மூழ்கின; ரயில் சேவைகள் நிறுத்தம்

மும்பை: கனமழை காரணமாக ரயில் தடங்கள் மூழ்கின; ரயில் சேவைகள் நிறுத்தம்
Published on

மும்பையில் கனமழை காரணமாக ரயில் தடங்கள் தண்ணீரில் மூழ்கியதால் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டது.

மகாராஷ்டிராவில் பருவமழை அதிகரித்து வரும் சூழலில், மும்பையில் கனமழை காரணமாக சியோன் ரயில் நிலையம் மற்றும் ஜிடிபி நகர் ரயில் நிலையம் இடையேயுள்ள ரயில் தடங்கள் மழைநீரில் மூழ்கின. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மும்பை குர்லா மற்றும் சிஎஸ்எம்டிக்கு இடையிலான உள்ளூர் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டதாக மத்திய ரயில்வே சிபிஆர்ஓ தெரிவித்துள்ளது.

மும்பை சி.எஸ்.எம்.டி- வாஷி இடையேயான துறைமுக பாதை ரயில் போக்குவரத்தும் காலை 10.20 மணி முதல் நிறுத்தப்பட்டுள்ளது. மும்பை நகரில் தொடரும் கனமழையால் நகரம் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com