பீகாரில் 2 கி.மீ-க்கு மாயமான ரயில் தண்டவாளம்! வேலியே பயிரை மேய்ந்ததுபோல் போலீசே உடந்தை!

பீகாரில் 2 கி.மீ-க்கு மாயமான ரயில் தண்டவாளம்! வேலியே பயிரை மேய்ந்ததுபோல் போலீசே உடந்தை!
பீகாரில் 2 கி.மீ-க்கு மாயமான ரயில் தண்டவாளம்! வேலியே பயிரை மேய்ந்ததுபோல் போலீசே உடந்தை!

பீகார் மாநிலத்தில் ரயில்வே இருப்புப் பாதையை சட்டவிரோதமாக கோடிக்கணக்கில் விற்பனை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தின் சமஸ்திபூர் பகுதியில் இயங்கி வந்த லோஹத் சர்க்கரை ஆலை கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மூடப்பட்டது. அருகில் உள்ள பந்தோல் ரயில் நிலையத்தில் இருந்து இந்த ஆலையினை இணைக்க ஒரு ரயில்வே பாதை போடப்பட்டு இருக்கிறது. சரக்கு போக்குவரத்திற்கு இந்த ரயில் பாதை பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. ஆலை மூடப்பட்டதால் இந்த ரயில் பாதையும் கைவிடப்பட்ட நிலையில் இருந்துள்ளது.

இந்த நிலையில், திடீரென இந்த ரயில்வே பாதை காணாமல் போயிருக்கிறது. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், அங்கிருந்த தண்டவாளத்தை ரயில்வே பாதுகாப்பு ஊழியர்களுடன் சிலர் சட்டவிரோதமாக பழைய இரும்பு கடையில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

இது குறித்து சம்ஸ்திபூர் ரயில்வே மண்டல மேலாளர் அசோக் அகர்வால் கூறுகையில் “ ரயில் தண்டவாளத்தைக் காணதாதது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஜான்ஜிஹர்பூர் ஆர்பிஎப் ஸ்ரீனிவாஸ் மற்றும் மதுபானி ரயில்வே ஆர்பிஎப் ஜமாதர் முகேஷ் குமார் சிங் இருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஆர்பிஎப் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம். ரயில்வே தண்டவாளத்தை முறையாக ஏலத்தில் விட்டுவிற்பனை செய்யாமல் ஆர்பிஎப் ஊழியர்கள் முறைகேடாக பழைய இரும்பு வியாபாரியிடம் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். இது தொடர்பாக தார்பங்கா ஆர்பிஎப் மற்றும் ரயில்வே ஊழில் ஒழிப்புத் துறை விசாரணை நடத்தி வருகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com