\
சிக்கன் சாப்பிட ஒரு வாரம் விடுமுறை கேட்ட ரயில்வே ஊழியர்

சிக்கன் சாப்பிட ஒரு வாரம் விடுமுறை கேட்ட ரயில்வே ஊழியர்

சிக்கன் சாப்பிட ஒரு வாரம் விடுமுறை கேட்ட ரயில்வே ஊழியர்
Published on

சிக்கன் சாப்பிடுவதற்காக ஒரு வாரம் விடுமுறை அளிக்குமாறு ரயில்வே ஊழியர் ஒருவர் எழுதிய விடுமுறை விண்ணப்ப கடிதம் ஆன்லைனில் வைரலாகப் பரவி வருகிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூர் ரயில் நிலையத்தில் பணிபுரிபவர் பகைராஜ் கோண்ட். இவர், நிலைய அதிகாரிக்கு கடந்த ஜூன் 17ல் ஒருவாரம் விடுமுறை வேண்டி விண்ணப்பம் அளித்தார். அதில், புனித ஷ்ரவான் மாதம் ஒருவாரத்தில் தொடங்க இருக்கிறது. அந்த மாதம் தொடங்கினால் என்னால் கோழி இறைச்சி உணவை எடுத்துக் கொள்ள முடியாது. எனவே, ஷ்ரவான் மாதம் தொடங்குவதற்கு முன்பாக கோழி இறைச்சி உணவை எடுத்துக் கொள்ள ஒரு வாரம் விடுமுறை அளிக்க வேண்டும் என கோண்ட் குறிப்பிட்டுள்ளார். அவர் ஜூன் 20 முதல் 27ம் தேதி வரை விடுமுறை கேட்டிருக்கிறார். கோழி இறைச்சியை எடுத்துக் கொள்ளாவிட்டால், உடல் பலவீனமடைந்து, தனது வேலையினை சரிவர செய்ய முடியாது என்றும் கோண்ட் கூறியிருக்கிறார். இந்தக் கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
வட இந்தியாவில் வசிப்பவர்கள் ஷ்ரவான் மாதத்தினை புனிதமாகக் கருதுகின்றனர். இதனால், அந்த  மாதத்தில் விரதமிருப்பதுடன், அசைவ உணவுகளைத் தவிர்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.   

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com