ரயில்வேயின் துணை நிறுவனங்களில் ஒன்றான இந்திய ரயில் நிலைய வளர்ச்சி நிறுவனம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடெங்கும் உள்ள ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணியை ரயில் நிலைய வளர்ச்சி நிறுவனம் கவனித்து வந்தது. இந்திய ரயில்வேயின் மற்றொரு துணை நிறுவனமான மாற்று எரிபொருள் கழகமும் கடந்த மாதம் மூடப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு துணை நிறுவனம் மூடப்பட்டுள்ளது. ரயில்வே துறையை சீரமைப்பது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் அளித்த பரிந்துரைகள் அடிப்படை இந்நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.