வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதே பாரதியாருக்கான அஞ்சலி - ராகுல் காந்தி

வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதே பாரதியாருக்கான அஞ்சலி - ராகுல் காந்தி

வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதே பாரதியாருக்கான அஞ்சலி - ராகுல் காந்தி

வேளாண்சட்டங்களை திரும்ப பெறுவதன் மூலம் சுப்ரமணிய பாரதியாருக்கு அஞ்சலி செலுத்துவோம் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிணாமங்கள் கொண்ட மகாகவி பாரதி 139வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் வீணருக்கு உழைத்துடலம் ஓயமாட்டோம். வேளாண்சட்டங்களை திரும்ப பெறுவதன் மூலம் சுப்ரமணிய பாரதியாருக்கு அஞ்சலி செலுத்துவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே திமுக தலைவர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், “'செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே' என்ற மகாகவி பாரதியின் இல்லத்தை அரசு இல்லமாக்கி சென்னையில் சிலை வைத்து சிறப்பித்தது திமுக அரசு. அவரது பிறந்தநாளில் 'என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்' என்ற வரி நாட்டு நிலைமையை நினைவூட்டுகிறது. வாழ்க பாரதி புகழ்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com