கர்நாடகாவில் சைக்கிள் ஓட்டியபடி பேரணியாக சென்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்கு சேகரித்தார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, கோலார் நகரில் ராகுல் காந்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பொதுமக்களுடன் சேர்ந்து பேருந்தில் பயணம் செய்தும், பின்னர் மாட்டுவண்டியில் சென்றும் அவர் வாக்கு சேகரித்தார். அதன்பிறகு, நடைபெற்ற பேரணியில் சைக்கிள் ஓட்டியபடி சென்று, காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். ராகுல் காந்தியுடன் ஏராளமான தொண்டர்களும் பேரணியில் பங்கேற்றனர்.
இதேபோல, பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, கர்நாடகத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் மீது கிரேனில் பூக்களை கொண்டுவந்து தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.