மகத்தான தலைவனை களங்கப்படுத்த முடியாது - பெரியார் குறித்து ராகுல் தமிழில் ட்வீட்

மகத்தான தலைவனை களங்கப்படுத்த முடியாது - பெரியார் குறித்து ராகுல் தமிழில் ட்வீட்

மகத்தான தலைவனை களங்கப்படுத்த முடியாது - பெரியார் குறித்து ராகுல் தமிழில் ட்வீட்
Published on

எவ்வளவு தீவிரமான வெறுப்பும் ஒரு மகத்தான தலைவனை களங்கப்படுத்த முடியாது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

கோவை மாநகரத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி செல்லும் சாலையில் சுந்தராபுரம் அருகே பெரியாரின் முழு உருவச்சிலை அமைந்துள்ளது. அந்த சிலையில் மர்ம ஆசாமிகள் காவி சாயம் பூசியது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இந்த செயல்களுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டங்களை பதிவு செய்து வருகின்றனர். இதுதொடர்பாக பாரத்சேனா அமைப்பின் தெற்கு மாவட்ட அமைப்பாளர் அருண் கிருஷ்ணன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பெரியார் சிலை அவமதிப்பு குறித்து முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தமிழில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், எவ்வளவு தீவிரமான வெறுப்பும் ஒரு மகத்தான தலைவனை களங்கப்படுத்த முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com