\
rahul gandhi warns an economic storm is on the way
ராகுல் காந்தி, மோடிஎக்ஸ் தளம்

”மிகக் கடினமான காலம் வர உள்ளது” - எச்சரிக்கும் ராகுல் காந்தி

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதை அடுத்து, மத்திய அரசை காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது.
Published on

மேற்காசியப் போர் காரணமாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பிறபொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. இதனால், நாட்டில் பெரிய பொருளாதார அதிர்ச்சி வர இருப்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மேற்காசியப் போர் காரணமாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பிறபொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. பல்வேறு பொருட்களின் உற்பத்திக்கும் சரக்குப் போக்குவரத்துக்கும் எரிபொருள் அவசியமாக உள்ளதுதான் இதற்குக் காரணம். மேலும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வெகுவாகச் சரிந்துவிட்டதும் விலைவாசி உயர மற்றொரு காரணமாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதை அடுத்து, மத்திய அரசை காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது. கடந்த நான்கு நாட்களில் எரிபொருள் விலை லிட்டருக்கு 4 ரூபாய் வரை உயர்த்தப்பட்டு, சராசரியாக பெட்ரோல்109 ரூபாய்க்கும், டீசல் 96 ரூபாய்க்கும் விற்பனையாவதாக காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.

ராகுல், மோடி
ராகுல், மோடி

தேர்தல் முடிவடைந்ததால் பிரதமர் நரேந்திர மோடி மக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றி வருவதாகக் குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ், பிரதமர் மோடியை 'விலைவாசியை உயர்த்தும் மனிதர்’என்றும் விமர்சித்துள்ளது. மறுபுறம், நாட்டில் பெரிய பொருளாதார அதிர்ச்சி வர உள்ளதாகவும், அதன் பாதிப்பு அதானி, அம்பானி, பிரதமர் மோடிக்கு அல்லாமல் இளைஞர்கள், தொழிலாளர்கள் மற்றும் சிறுவியாபாரிகளுக்கே ஏற்படும் என்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”மிகக் கடினமான காலம் வர உள்ளது. பல ஆண்டுகளாக இல்லாத அளவுக்குப் பொருளாதார புயல் உருவாகி வருகிறது. பிரதமர் மோடி சிக்கன நடவடிக்கைகள் குறித்துப் பேசினாலும், அவரே வெளிநாட்டுப் பயணங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

rahul gandhi warns an economic storm is on the way
”மோடி அரசின் தவறு; விலை கொடுக்கும் மக்கள்” - பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com