மகளிர் இட ஒதுக்கீடு மசோதா: ராகுல்காந்தி vs அமித்ஷா!

மகளிருக்கான இடஒதுக்கீட்டில் ஒபிசி பிரிவினர் பயன்பெறும் வகையில் உள்ஒதுக்கீடு அவசியம் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
ராகுல்காந்தி, அமித்ஷா
ராகுல்காந்தி, அமித்ஷாpt web

மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவளித்து மக்களவையில் பேசிய எம்.பி ராகுல் காந்தி, “ஓபிசி, தலித் மற்றும் பழங்குடி சமுதாயங்களுக்கு உள்-ஒதுக்கீடு தேவை. சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த ஏன் அஞ்சுகிறீர்கள்?

மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதா முழுமையானது அல்ல. மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு தொகுதி மறுவரையறையெல்லாம் தேவையில்லை. இந்த மசோதாவை நிறைவேற்ற எதற்காக 8 ஆண்டுகள் காத்திருந்தீர்கள்? சாதிவாரி கணக்கெடுப்பை நீங்கள் நடத்துங்கள் அல்லது நாங்கள் நடத்துவோம்” என்றார்.

அப்போது பாஜக எம்பிக்கள் குரல் எழுப்பியதால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பேசிய ராகுல்காந்தி, “மத்திய அரசின் மூத்த அதிகாரிகளில் ஒரு சிலர் மட்டுமே ஓபிசி பிரிவை சேர்ந்தவர்கள். இவர்கள்தான் மத்திய அரசை வழிநடத்துகின்றனர்” என விமர்சித்தார்.

ராகுல் காந்தியின் பேச்சுக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் அமித்ஷா, “அரசை நடத்துவது அமைச்சர்கள்தான். அதிகாரிகள் அல்ல. நாடு முழுவதும் உள்ள பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர்களில் 27 சதவீதம் ஓபிசி பிரிவை சேர்ந்தவர்கள். பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களில் 29 சதவீதம் ஓபிசி பிரிவை சேர்ந்தவர்கள். மகளிர் இடஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு உள்ஒதுக்கீடு தேவை என மக்களவையில் பேசியவர்களைவிட, அதிகமாக பாஜக ஓபிசி பிரிவினருக்கு வாய்ப்பு அளிக்கிறது” என குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com