\
இந்திரா காந்தி நினைவு தினம்
இந்திரா காந்தி நினைவு தினம்முகநூல்

இந்திரா காந்தியின் நினைவு நாள்.. மலரஞ்சலி செய்த ராகுல் காந்தி!

முன்னாள் பிரதமரும் தனது பாட்டியுமான இந்திரா காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் மக்களவை தலைவர் ராகுல் காந்தி மலரஞ்சலி செலுத்தினார்.
Published on

முன்னாள் பிரதமரும் தனது பாட்டியுமான இந்திரா காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் மக்களவை தலைவர் ராகுல் காந்தி மலரஞ்சலி செலுத்தினார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984ஆம் ஆண்டு இதே நாளில் தனது பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது 40ஆவது நினைவு நாளை காங்கிரசார் இன்று நாடு முழுவதும் அனுசரித்து வருகின்றனர்.

டெல்லி சக்திஸ்தலில் உள்ள இந்திரா காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மலரஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்ட ராகுல் காந்தி, தனது பாட்டி தேசத்தின் ஒற்றுமைக்காக தன்னையே அர்ப்பணித்தவர் என்றும் அவர் நாட்டுக்கு ஊக்க சக்தியாக திகழ்ந்து வருகிறார் என்றும் கூறியுள்ளார்.

இந்திரா காந்தி நினைவு தினம்
"அனைவரது வாழ்விலும் துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் பெருகட்டும்”- தலைவர்கள் தீப ஒளித்திருநாள் வாழ்த்து!

இந்திரா காந்தி குறித்த சிறு வீடியோ ஒன்றையும் அப்பதிவில் ராகுல் காந்தி இணைத்துள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவும் எக்ஸ் தள பக்கத்தில் இந்திரா காந்தி குறித்து நினைவு கூர்ந்துள்ளார்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com