"தலைமைப் பொறுப்பை ராகுல்காந்தி உடனே ஏற்க வேண்டும்" - காங்கிரஸ் சமூக ஊடகப்பிரிவு

"தலைமைப் பொறுப்பை ராகுல்காந்தி உடனே ஏற்க வேண்டும்" - காங்கிரஸ் சமூக ஊடகப்பிரிவு

"தலைமைப் பொறுப்பை ராகுல்காந்தி உடனே ஏற்க வேண்டும்" - காங்கிரஸ் சமூக ஊடகப்பிரிவு
Published on

காங்கிரஸின் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி உடனடியாக ஏற்க வேண்டும் என்று அக்கட்சியின் சமூக ஊடகப்பிரிவு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

காங்கிரசுக்கு நிரந்தரத் தலைவர் இருக்க வேண்டும் எனத் தாங்கள் அனைவரும் விரும்புவதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் பேரியக்கத்திற்கு அதிக ஆற்றல் தேவை என்று சசி தரூர் குறிப்பிட்டார். சோனியா காந்தி கட்சியை நன்றாக வழிநடத்திய தலைவர் என்றபோதிலும், தலைமைப் பொறுப்பிலிருந்து விலக விரும்புவதாக நீண்டகாலமாக கூறி வருகிறார் என்றும் சசி தரூர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங் பதவி விலகியதால் ஏற்பட்டுள்ள சூழல் குறித்து டெல்லியில் ராகுல் காந்தியின் இல்லத்தில் மூத்த தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால், மூத்த தலைவர் அம்பிகா சோனி உள்ளிட்ட பலர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். பஞ்சாபின் புதிய முதலமைச்சர் அறிவிக்கப்படும்வரை காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர்கள் சண்டிகரிலேயே தங்கி இருப்பர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com