காந்தி, ராகுல் காந்தி, மோடி
காந்தி, ராகுல் காந்தி, மோடிபுதியதலைமுறை

”RSS வழிவந்தவர்கள் மகாத்மா காந்தியை பற்றி அறிந்திருக்க வழியில்லை” பிரதமரின் பேச்சுக்கு ராகுல் பதிலடி

1982ம் ஆண்டு மகாத்மா காந்தியின் வாழ்க்கையை சித்தரிக்கும் படம் வெளியான பிறகுதான், உலகம் மகாத்மாகாந்தியைப் பற்றி அறிந்துக்கொண்டார்கள் என்று மோடி பேசியதற்கு ராகுல்காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
Published on

காந்தி பற்றிய மோடியின் பேச்சுக்கு பதிலடி கொடுத்த ராகுல்காந்தி

1982ம் ஆண்டு மகாத்மா காந்தியின் வாழ்க்கையை சித்தரிக்கும் படம் வெளியான பிறகுதான், உலகம் மகாத்மாகாந்தியைப் பற்றி அறிந்துக்கொண்டார்கள் என்று மோடி பேசியதற்கு ராகுல்காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி ”ஆர் எஸ் எஸ் மார்க்கத்தில் வந்தவர்கள் மகாத்மா காந்தியை பற்றி அறிந்திருக்க வழியில்லை . மகாத்மா காந்தி சூரியனைப்போன்றவர். உலகம் முழுவதும் சூழ்ந்துள்ள இருளை அகற்றுவதற்கான உந்து சக்தி. உண்மை மற்றும் அகிம்சை மூலம் போராடும் தைரியத்தை காந்தி வழங்கியவர்” என்றுகாந்தியை புகழாரம் சூட்டியுள்ளார் ராகுல்காந்தி. டெல்லியில் காந்திசிலை முன்பு பேசிய இந்த வீடியோவை அவர் தன் வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com