குஜராத் முதல் மேகாலயா வரை.. இரண்டாம் கட்ட இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு திட்டமிடும் ராகுல் காந்தி?

இந்திய நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் மீண்டும் ஒரு ஒற்றுமை யாத்திரைக்கு ராகுல் காந்தி திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

இந்திய தேர்தல் களத்தில் அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. அந்த வகையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குஜராத்திலிருந்து மேகாலயா வரை அடுத்த கட்ட இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் நானா பட்டோல் இதை தெரிவித்துள்ளார். எனினும் அந்த யாத்திரை எப்போது தொடங்கும் என அவர் தெரிவிக்கவில்லை. ராகுல் காந்தி முதல் கட்ட இந்திய ஒற்றுமை யாத்திரையை தமிழகத்தில் தொடங்கி காஷ்மீர் வரை மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com