இந்திரா காந்தி நினைவு நாள் - நினைவிடத்தில் ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை

இந்திரா காந்தி நினைவு நாள் - நினைவிடத்தில் ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை

இந்திரா காந்தி நினைவு நாள் - நினைவிடத்தில் ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை
Published on
இந்திரா காந்தியின் நினைவு தினமான இன்று அவரது நினைவிடத்தில் ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 37வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி அவரது நினைவிடத்தில் இந்திரா காந்தியின் பேரனும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்தியாவின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தி, கடந்த 1984ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி அன்று தனது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்திரா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு, டெல்லி சக்தி ஸ்டால் பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி குடும்பத்தினர் மரியாதை செலுத்துவது வழக்கம். இந்நிலையில், இந்திரா காந்தியின் 37வது நினைவு தினமான இன்று ராகுல் காந்தி இன்று காலை நினைவிடத்திற்கு வந்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com