'பிரதமரின் செயலற்ற தன்மையால் மணிப்பூரில் அராஜகம் நடக்கிறது' - ராகுல் காந்தி கொதிப்பு

மணிப்பூரில் 2 பழங்குடி பெண்களை சாலையில் நிர்வாணமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ வெளியாகியுள்ள நிலையில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மணிப்பூரில் இரண்டு பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இருப்பது தொடர்பாக விசாரணையை தொடங்கி இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. நாட்டையே உலுக்கியிருக்கும் இந்நிகழ்வுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “பிரதமரின் அமைதி மற்றும் செயலற்றத் தன்மையால் மணிப்பூரில் அராஜகம் நடக்கிறது. இந்தியா என்னும் ஒருமைப்பாட்டுச் சொல் மணிப்பூரில் தாக்கப்படும் போது இந்தியா அமைதியாக இருக்காது. நாங்கள் மணிப்பூர் மக்களுடன் நிற்கிறோம். சமாதானம் ஒன்றே இதனை முன்னோக்கி செல்லும் வழி” என்று குறிப்பிட்டு உள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com