விவசாயிகளுக்கு ராகுல்காந்தி நேரில் ஆதரவு

விவசாயிகளுக்கு ராகுல்காந்தி நேரில் ஆதரவு

விவசாயிகளுக்கு ராகுல்காந்தி நேரில் ஆதரவு
Published on

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

வறட்சி நிவாரணத் தொகையை அதிகரிக்க வேண்டும், பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 18-ஆவது நாளாக அவர்களின் போராட்டம் நீடித்து வருகிறது. மத்திய அமைச்சர்களைச் சந்தித்து பேசியும் எந்த பயனும் இல்லை. பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்யும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி நேரில் சந்தித்து பேசினார். விவசாயிகளுடன் உட்கார்ந்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 3 ஆண்டுகளாக விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு தொடர்ந்து தமிழக மக்களுக்கு மதிப்பு கொடுக்கவில்லை என்றார். பிரதமர் மோடி விவசாயிகளை நேரில் சந்தித்து அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com