டெல்லி சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை? - பெற்றோரை சந்தித்து ஆறுதல் சொன்ன ராகுல்காந்தி

டெல்லி சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை? - பெற்றோரை சந்தித்து ஆறுதல் சொன்ன ராகுல்காந்தி
டெல்லி சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை? - பெற்றோரை சந்தித்து ஆறுதல் சொன்ன ராகுல்காந்தி

டெல்லி பழைய நங்கல் பகுதியில், பாலியல் வன்கொடுமையோடு கொலை செய்யப்பட்டு பெற்றோரின் அனுமதியின்றி தகனம் செய்யப்பட்டதாக கூறப்படும் 9 வயது சிறுமியின் குடும்பத்தை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி சந்தித்தார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் பேசிய ராகுல்காந்தி "பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்யப்பட்ட ச்சிறுமியின் குடும்ப உறுப்பினர்கள் தங்களுக்கு நீதி வழங்கப்படவில்லை என்றும், தங்களுக்கு உதவ வேண்டும் என்றும் கூறுகிறார்கள். நாங்கள் அதை செய்வோம்" என்று கூறினார். இந்தச் சம்பவம் குறித்த கருத்தை பகிர்ந்த ராகுல் காந்தி, "ஒரு பட்டியலின மகளும் நாட்டின் மகள்தான்" என்று ட்வீட் செய்துள்ளார்.

தென்மேற்கு டெல்லியில் டெல்லி கன்டோன்மென்ட் அருகே ஞாயிற்றுக்கிழமை ஒன்பது வயது சிறுமியை சிலர் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாகக் கூறப்படுகிறது.  கொலை செய்யப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் நான்கு பேர் மீது டெல்லி போலீசார் போக்சோ, எஸ்/எஸ்சி வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக தென்மேற்கு டெல்லியின் துணை போலீஸ் கமிஷனர் இங்கித் பிரதாப் சிங் கூறுகையில், “ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில், சுடுகாட்டிற்கு அருகில் பெற்றோருடன் வசித்து வந்த சிறுமி, சுடுகாட்டில் உள்ள தண்ணீர் குளிரூட்டியில் இருந்து தண்ணீர் பிடிக்க சென்றுள்ளார். அதன்பின்னர் மாலை 6 மணியளவில், சிலர் சிறுமியின் தாயைக் கூப்பிட்டு, குளிரூட்டியில் இருந்து தண்ணீர் அருந்தியபோது சிறுமி இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். பின்னர் பெற்றோரின் அனுமதியின்றியே அச்சிறுமியை தகனம் செய்தனர்" என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com