ஆல்வார் பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்தை சந்தித்தார் ராகுல் காந்தி!
ஆல்வாரில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆறுதல் கூறினார்.
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் ஏப்ரல் 26 ஆம் தேதி பெண் ஒருவர் தனது கணவருடன் சென்று கொண்டிருந்தபோது, 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்தது. கணவன் முன்பாக அந்த பெண்ணை அந்தக் கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது. ராஜஸ்தான் மாநிலத்தை உலுக்கிய இச்சம்பவத்திற்கு நீதி கேட்டு எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. இதையடுத்து கடந்த 2 ஆம் தேதி போலீசார் வழக்குப் பதிவு செய்து, அந்தக் கும்பலை கைது செய்தனர்.
ராஜஸ்தானில் தேர்தல் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தை குறிப்பிட்டு எதிர்க்கட்சிகள் போராட்டங்கள் நடத்த ஆரம்பித்தன. இதையடுத்து காங் கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திரை இன்று சந்தித்து ஆறுதல் கூறினார். குற்றாவளிகள் மீது கடும் நடவடிக் கை எடுக்கப்படும் என அவர்களிடம் உறுதி கூறினார்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி கூறும்போது, "ஆல்வார் பலாத்கார விவகாரம் என் கவனத்துக்கு வந்தது. ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டிடம் உடனடியாகப் பேசினேன். இது அரசியல் பிரச்னை இல்லை. நான் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தைச் சந்தித்தேன். அவர்கள் என்னிடம் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள். நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

