‘ராகுல் காந்திக்கு எந்த விஷயத்திலும் தேர்ச்சி பெற ஆர்வமில்லை’ - ஒபாமா

‘ராகுல் காந்திக்கு எந்த விஷயத்திலும் தேர்ச்சி பெற ஆர்வமில்லை’ - ஒபாமா
‘ராகுல் காந்திக்கு எந்த விஷயத்திலும் தேர்ச்சி பெற ஆர்வமில்லை’ - ஒபாமா

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, தனது அரசியல் கால நினைவுக் குறிப்புகள் குறித்து ‘The Promised Land’ என்றொரு நூல் எழுதியுள்ளார். அந்நூலில் இந்திய அரசியல் தலைவர்கள் குறித்து குறிப்பிட்டு உள்ளார்.

மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு 2009 முதல் 2017 வரை ஆட்சியில் இருக்கும் போது.ஒபாமா அமெரிக்காவின் அதிபராக இருந்தார். ஒபாமாவின் ‘The Promised Land’  நூலை மேற்கோள் காட்டி நியூயார்க டைம்ஸ் மன்மோக சிங் மற்றும் ராகுல்காந்தி குறித்து கூறியிருப்பதாவது:-

பாதுகாப்பு செயலாளர் பாப் கேட்ஸ் மற்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இருவரும் ஒருவித உணர்ச்சியற்ற ஒருமைப்பாட்டைக் கொண்டவர்கள் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து, நியூயார்க் டைம்ஸ் கட்டுரை கூறி உள்ளது.

ராகுல் காந்தி பற்றி கூறும் போது ஒரு பதற்றமான, அறியப்படாத குணம் கொண்டவர். அவர் ஒரு மாணவராக இருப்பதால், அவர் பாடங்களை செய்து ஆசிரியரைக் கவர ஆர்வமாக இருந்தார். ஆனால் ஆழமாக எந்த விஷயத்திலும் தேர்ச்சி பெற ஆர்வம் இல்லை' என்று கூறி உள்ளது.

டிசம்பர் 2017-இல் காங்கிரஸின் துணைத் தலைவராக இருந்த ராகுல் காந்தி, ஒபாமாவின் இந்திய பயணத்தின் போது ஒபாமாவை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com