தெலங்கானாவில் 16 நாட்கள்!! 50வது நாளாக தொடரும் ராகுலின் நடைப்பயணம்.. அப்டேட் என்ன?

தெலங்கானாவில் 16 நாட்கள்!! 50வது நாளாக தொடரும் ராகுலின் நடைப்பயணம்.. அப்டேட் என்ன?
தெலங்கானாவில் 16 நாட்கள்!! 50வது நாளாக தொடரும் ராகுலின் நடைப்பயணம்.. அப்டேட் என்ன?

நான்கு நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரை இன்று தெலுங்கானாவின் நாராயண்பேட் மாவட்டத்தில் உள்ள மக்தலில் இருந்து மீண்டும் தொடங்கியுள்ளது.

தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.ரேவந்த் ரெட்டி, எம்பி உத்தம் குமார் ரெட்டி, சிஎல்பி தலைவர் பாட்டி விக்ரமார்கா மற்றும் ஏராளமான கட்சித் தலைவர்கள் ராகுல் காந்தியுடன் இணைந்து யாத்திரை செல்கின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் முதல் அக்டோபர் 26 வரை எடுத்த ஓய்வுக்கு பிறகு இன்று நடைப்பயணத்தை தொடங்கியுள்ளார் ராகுல்காந்தி.

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில், கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரையிலான 3,570 கி.மீ ‘ ஒற்றுமை யாத்திரை’ நடைபயணத்தை செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கினார். தெலுங்கானா மாநிலத்தில் 16 நாட்கள் யாத்திரை தொடர்ந்து நடைபெறவுள்ளது. 19 சட்டமன்ற மற்றும் 7 நாடாளுமன்ற தொகுதிகளை உள்ளடக்கி 375 கி.மீ தூரம் கடந்து, நவம்பர் 7 ம் தேதி மகாராஷ்டிராவை சென்றடைய திட்டமிடப்பட்டுள்ளது இந்த யாத்திரை. பின்பு நவம்பர் 4ம் தேதி ஒரு நாள் இடைவேளை எடுக்கப்படும்.

ராகுல் காந்தி இந்த பயணத்தின் போது, சிந்தினையானர்கள், பல்வேறு சமூகங்களின் தலைவர்கள், விளையாட்டு, வணிகம் மற்றும் பொழுதுபோக்குத் துறைகளைச் சேர்ந்த பிரமுகர்கள் உள்ளிட்டோரை சந்திக்கவுள்ளார். மேலும் தெலுங்கானா முழுவதும் உள்ள பிராதனை கூடங்கள், மசூதிகள் மற்றும் கோவில்களுக்குச் சென்று பிரார்த்தனை செய்வார் என்று தெலுங்கானா பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com