\
மறைந்த காங்கிரஸ் நிர்வாகியின் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி

மறைந்த காங்கிரஸ் நிர்வாகியின் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி

மறைந்த காங்கிரஸ் நிர்வாகியின் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி
Published on

டெல்லியில் மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் கேப்டன் சதீஷ் சர்மா உடலை ராகுல்காந்தி தோளில் சுமந்து சென்றார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சதீஷ் சர்மா(73) நேற்று முன்தினம் கோவாவில் காலமானார். இவர் 1993 - 1996 ஆம் ஆண்டு மத்திய  பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்தவர். மேலும், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நெருங்கிய நண்பராகவும் இருந்தவர்.

இந்நிலையில், மறைந்த கேப்டன் சதீஷ் சர்மா உடலை, ராகுல்காந்தி தோளில் சுமந்து சென்றார். இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

முன்னதாக, சதீஷ் சர்மா மறைவுக்கு ராகுல்காந்தி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்திருந்தார். அதில், “கேப்டன் சதீஷ் சர்மா மறைந்ததைக் கேட்டு நான் மிகவும் வருத்தப்படுகிறேன். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது அன்பும் இரங்கலும் தெரிவித்துக்கொள்கிறேன். நாங்கள் அவரை மிஸ் செய்வோம்” எனத் தெரிவித்திருந்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com