மசோதா விவாதம் |நாடாளுமன்றத்தில் சிரிப்பலையை ஏற்படுத்திய ராகுலின் பேச்சு!
2029-ஆம் ஆண்டில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை விரைவாக அமல்படுத்துவதை உறுதிசெய்யும் மூன்று மசோதாக்கள் மீதான விவாதங்கள் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரில் நடைபெற்று வருகிறது. இந்த விவாதங்களுக்கு மத்தியில், மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச்சு நாடாளுமன்றத்தில் சிர்ப்பலையை உருவாக்கியது .
ராகுல் காந்தி பேசியபோது, "தாய், சகோதரி அல்லது மனைவி போன்ற உறவுகளின் வடிவில், ஏறக்குறைய அனைவரின் வாழ்விலும் பெண்களின் செல்வாக்கு இருக்கிறது. ஆனால் எனக்கும் பிரதமருக்கும் மனைவி பிரச்னைகள் இல்லை” என்றார். இதனைக் கேட்டதும் அவையில் இருந்த அனைவரும் சிரித்தனர் .
மேலும் பேசிய அவர், ”என்னால் 20 வருசமாக செய்ய முடியாததை என் தங்கை செய்தார். பிரியங்கா காந்தி நேற்று பேசியபோது உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சிரிக்க வைத்தார்” என்றார். இது மக்களவையில் கூடியிருந்த உறுப்பினர்களிடையே மீண்டும் ஒருமுறை சிரிப்பலையை ஏற்படுத்தியது.
மகளிர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா மற்றும் முன்மொழியப்பட்ட தொகுதிகள் மறுவரையறை மீதான விவாதத்தின் மத்தியில் பிரியங்கா வதோதரா சுமார் 20 நிமிடங்கள் உரையாற்றினார். அப்போது ஆளும் கட்சி உறுப்பினர்களை நோக்கிப் பேசிய அவர், ஒருகட்டத்தில், "சாணக்கியர் உயிரோடு இருந்திருந்தால், உங்கள் தந்திரத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்திருப்பார்" என்று கூறினார். ஷா பெரும்பாலும் இந்திய அரசியலின் சாணக்கியர் என்று குறிப்பிடப்படுகிறார். பிரியங்காவின் இந்தக் கருத்து, மத்திய அமைச்சர் மற்றும் பிற பாஜக எம்.பி.க்களிடையே பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியிருந்தது.

