இந்தியா
அசாம் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுடன் உணவருந்திய ராகுல் காந்தி
அசாம் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுடன் உணவருந்திய ராகுல் காந்தி
அசாம் மாநில சட்டமன்றத் தேர்தலையொட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் ராகுல் காந்தி அங்குள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் அமர்ந்து உணவருந்திய புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.
தமிழகம், பாண்டிச்சேரி, கேரளா, அசாம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதையொட்டி ராகுல் காந்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழகம், கேரளாவில் மீன் பிடித்தது, கடலில் மீனவர்களுடன் உணவருந்தி நீச்சல் அடித்தது என கவனத்தை ஈர்த்தவர், அசாம் மாநிலத்தில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுடன் அமர்ந்து உணவருந்தியது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
ஏற்கனவே, பிரியங்கா காந்தி தேயிலைத் தோட்டங்களில் தேயிலை பறித்த புகைப்படங்கள் கவனத்தை ஈர்த்தன என்பது குறிப்பிடத்தக்கது.