ராகுல் காந்தி - தேஜஸ்வி யாதவ்web
இந்தியா
பிஹார்| இருவரும் இணைந்து மாற்றத்தை கொண்டு வருவோம்.. தேஜஸ்விக்கு ராகுல் காந்தி வாழ்த்து!
பிஹாரில் இருவரும் இணைந்து மாற்றத்தை கொண்டுவருவோம் என தேஜஸ்விக்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்..
பிஹாரில் நாம் இருவரும் இணைந்து மாற்றத்தை கொண்டு வருவோம் என தேஜஸ்வி யாதவுக்கு ராகுல் காந்தி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிஹார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் இன்று 36ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அதையொட்டி ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் வாழ்த்துச்செய்தி வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் நீண்ட காலம் வாழ வாழ்த்துவதாக குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, நாம் இருவரும் இணைந்து வேலைவாய்ப்புகளை உருவாக்கி சமத்துவத்தை ஏற்படுத்தி முன்னேற்றத்தை கொண்டு வருவோம் எனக்கூறியுள்ளார். இருவரும் அருகருகே பைக்கில் சென்ற படத்தையும் ராகுல் காந்தி இணைத்துள்ளார்.
பிஹார் தேர்தலில் போட்டியிடும் மகாகத்பந்தன் கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் இராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகள் சேர்ந்து போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது..

