\
மணிப்பூர் தீவிரவாத தாக்குதல்: ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி கண்டனம்

மணிப்பூர் தீவிரவாத தாக்குதல்: ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி கண்டனம்

மணிப்பூர் தீவிரவாத தாக்குதல்: ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி கண்டனம்
Published on: 

மணிப்பூரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தனது ட்விட்டர் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, மணிப்பூரில் ராணுவ வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி இருப்பது நாட்டை காப்பதில் மோடி அரசு திராணியற்று உள்ளது என்பதை மீண்டும் நிரூபிக்கிறது என பதிவிட்டுள்ளார். மேலும், உயிரிழந்த தியாகிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இரங்கலை தெரிவித்துக்கொண்ட ராகுல், வீரர்களின் தியாகத்தை தேசம் நினைவுகூறும் என பதிவிட்டுள்ளார்.

அதேபோல தனது கண்டனத்தை பதிவு செய்துள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு எனது பணிவான அஞ்சலிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். தியாகிகளின் தியாகத்தை தேசம் என்றும் நினைவுகூரும் என பதிவிட்டுள்ளார். மேலும், பயங்கரவாதிகளின் இந்த கோழைத்தனமான செயலுக்கு எதிராக நாடு முழுவதும் ஒன்றுபட்டுள்ளது எனவும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com