காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்த ராகுல் காந்தி ஒருவரே போதும் - அரவிந்த் கெஜ்ரிவால்

காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்த ராகுல் காந்தி ஒருவரே போதும் - அரவிந்த் கெஜ்ரிவால்

காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்த ராகுல் காந்தி ஒருவரே போதும் - அரவிந்த் கெஜ்ரிவால்
Published on

காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்த ராகுல் காந்தி ஒருவரே போதும் என டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாரதிய ஜனதாவின் B அணி என்ற ஆம் ஆத்மி மீதான விமர்சனத்தை நிராகரிப்பதாகத் தெரிவித்தார். காங்கிரசை விட பாரதிய ஜனதாவை ஆம் ஆத்மி கட்சிதான் கடுமையாக எதிர்த்து அரசியல் செய்து வருவதாகவும், அதனால்தான் பல்வேறு சோதனைகளை சந்திந்து வருவதாகவும் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

மேலும் 2024 தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் கூட்டணி சேர வேண்டும் என்று கூறுபவர்களே சேர்ந்து கொள்ளட்டும் என்றும், தனக்கு கூட்டணி அரசியலில் புரிதல் இல்லை என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து காங்கிரசை நீங்கள் பலவீனப்படுத்துவதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், காங்கிரஸ் பலவீனமடைய நான் தேவையில்லை ராகுல்காந்தி ஒருவரே போதும் என்று விமர்சித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com