மணிப்பூர்: ஒரே விமானத்தில் பயணித்த காங். தலைவர்கள்.. 2ஆம்கட்ட யாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி!

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தனது 2வது கட்ட பாத யாத்திரையை, இன்று (ஜன.14) மணிப்பூரில் தொடங்கினார்.
ராகுல் காந்தி
ராகுல் காந்திட்விட்டர்

காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தியை முன்னிறுத்தி காங்கிரஸ் கட்சி மேற்கொள்ளும் ஒற்றுமை யாத்திரையின் இரண்டாவது பாகம் மணிப்பூரிலிருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வரை சுமார் 66 நாட்களுக்கு நடைபெற உள்ளது. மொத்தம் 6700க்கும் அதிகமான கிலோமீட்டர்கள் ராகுல் காந்தி இந்த ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்க உள்ள நிலையில், இதன் தொடக்க நிகழ்ச்சி மணிப்பூர் மாநிலத்தில் இன்று தொடங்கியது.

அதன்படி, மணிப்பூரில் உள்ள தெளபல் மாவட்ட மைதானத்தில் இருந்து தனது 2கட்ட நடைப்பயணத்தை ராகுல் காந்தி, இன்று பிற்பகல் தொடங்கினார். தொடக்க நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே மற்றும் அக்கட்சியின் முன்னணித் தலைவா்கள் பங்கேற்றனர். முன்னதாக இம்பாலுக்கு வருகை தந்த ராகுல் காந்திக்கு கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அவர் கோங்ஜோம் போர் நினைவிடத்திற்குச் சென்றார். ராகுலின் முந்தைய நடைப்பயணத்தைப்போல் அல்லாமல், இந்த முறை பெரும்பாலும் பேருந்துகளில் நீதிப் பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது. சிலவேளைகளில் நடைப்பயணமும் இருக்கும் என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், ஹரியானா முன்னாள் முதல்வர் பூபேந்திர சிங், மத்தியப் பிரதேசம் முன்னாள் முதல்வர் திக் விஜய் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான ஆனந்த் சர்மா, சுஜி வாலா, சச்சின் பைலட், மனிஷ் திவாரி உள்ளிட்ட அனைவரும் மணிப்பூர் அழைத்துச் செல்லப்பட்டனர்.

அதேபோல தமிழகத்திலிருந்து மாணிக்கம் தாக்கூர், தமிழ்நாடு சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வபெருந்தகை உள்ளிட்டோரும் அழைத்துச் செல்லப்பட்டனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com