இந்தியா
காதி காலண்டரில் காந்திக்கு பதில் மோடி...! ராகுல் காந்தி, மம்தா கடும் கண்டனம்
காதி காலண்டரில் காந்திக்கு பதில் மோடி...! ராகுல் காந்தி, மம்தா கடும் கண்டனம்
கதர் கிராமத் தொழில் வாரியத்தின் காலண்டரில் மகாத்மா காந்தியின் படத்தை அகற்றி விட்டு பிரதமர் மோடி படத்தை இடம்பெறச் செய்ததற்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, இது மங்கள்யானின் பாதிப்பு என்று கூறியுள்ளார். மன்மோகன் சிங் ஆட்சியில் முயற்சிக்கப்பட்டு செவ்வாயில் தரையிறங்கிய மங்கள்யான் விண்கலத்தின் வெற்றிக்கு மோடி உரிமை கொண்டாடுவதை மறைமுகமாக ராகுல் குறிப்பிட்டார். கதர் கிராமத் தொழிலை காந்தி நேசித்த நிலையில், அந்த துறையின் வளர்ச்சிக்கும் தானே காரணம் என்பது போல மோடி நடந்திருப்பதாக ராகுல் கூறியுள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜியும் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.