"ராகுலும் பிரியங்காவும் அனுபவம் அற்றவர்கள்" - அமரிந்தர் சிங் விமர்சனம்

"ராகுலும் பிரியங்காவும் அனுபவம் அற்றவர்கள்" - அமரிந்தர் சிங் விமர்சனம்

"ராகுலும் பிரியங்காவும் அனுபவம் அற்றவர்கள்" - அமரிந்தர் சிங் விமர்சனம்
Published on

ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் அனுபவமற்றவர்கள் என பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சர் அமரிந்தர் சிங் சாடியுள்ளார்.

ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வரும் சட்டப்பேரவை தேர்தலில் பஞ்சாப் காங்கிரஸ் கட்சித் தலைவர் சித்துவுக்கு எதிராக வலிமையான வேட்பாளரை களமிறக்கப்போவதாகவும் அமரிந்தர் சிங் கூறியுள்ளார். தேசத்திற்கே ஆபத்தான மனிதரான சித்துவை வீழ்த்த தனது முழு பலத்தை திரட்டி போராடப்போவதாகவும் அமரிந்தர் குறிப்பிட்டுள்ளார். பஞ்சாப் முதலமைச்சராக இருந்த அமரிந்தர் சிங் உட்கட்சி பூசல் எதிரொலியாக தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். தனது அடுத்த கட்ட முடிவு குறித்து ஆதரவாளர்களுடன் பேசி அறிவிப்பு வெளியிட உள்ளதாகவும் அமரிந்தர் சிங் தெரிவித்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com