\
“சட்டவிதிப்படியே ரஃபேல் ஒப்பந்தம்” - நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

“சட்டவிதிப்படியே ரஃபேல் ஒப்பந்தம்” - நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

“சட்டவிதிப்படியே ரஃபேல் ஒப்பந்தம்” - நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்
Published on: 

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் சட்ட விதிகளின்படியே நடந்திருப்பதை உச்ச நீதிமன்ற தீர்ப்பு உறுதிப்படுத்தியதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த தகவல்களை உச்ச நீதிமன்றத்திற்கு சீலிட்ட கவரில் மத்திய அரசு அளித்ததாகவும், அரசு அளித்த விளக்கம் போதுமானதாக இருப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளதாகவும் கூறினார். 

நாட்டின் பாதுகாப்பும், ராணுவ பலமும் மிகவும் முக்கியம் என்பதே அரசின் நிலை எனத் தெரிவித்த நிர்மலா சீதாராமன், சட்ட விதிகளின்படியே பிரான்ஸ், இந்தியா இடையேயான ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com