ரஃபேல் ஒப்பந்தம் - சிஏஜி அறிக்கை நாளை தாக்கல்?

ரஃபேல் ஒப்பந்தம் - சிஏஜி அறிக்கை நாளை தாக்கல்?

ரஃபேல் ஒப்பந்தம் - சிஏஜி அறிக்கை நாளை தாக்கல்?
Published on

நாளை தொடங்க உள்ள நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ரபேல் போர் விமான கொள்முதல் குறித்த தலைமை கணக்கு அதிகாரியின் அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ளது. 16வது மக்களவையின் கடைசி கூட்டத்தொடர் இது. கூட்டத்தொடரின் முதல் நாளில் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பிக்களின் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்ற உள்ளார். இந்நிலையில் பட்ஜெட் தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக அனைத்து கட்சி எம்பிக்கள் கூட்டத்திற்கு மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அழைப்பு விடுத்துள்ளார். 

இது தவிர மத்திய அரசு சார்பாக அனைத்துக்கட்சி கூட்டமும் நாளை நடைபெற உள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பிப்ரவரி 1ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் வருமான வரி விலக்கு வரம்பு அதிகரிப்பு, விவசாயிகளுக்கான சலுகைகள் உள்ளிட்டவற்றை அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், நாளை தொடங்க உள்ள நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ரபேல் போர் விமான கொள்முதல் குறித்த தலைமை கணக்கு அதிகாரியின் அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

இதில் ரபேல் விமானம் வாங்குவதற்கு சரியான நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா இல்லையா என்பது குறித்த விவரங்கள் மட்டுமே இருக்கும் என்று தெரிகிறது. ரபேல் விமானத்தின் விலை குறித்த தகவல்கள் ரகசியம் கருதி இந்த அறிக்கையில் இடம் பெறாது என்றும் கூறப்படுகிறது. 

பிரான்ஸ் நாட்டிடமிருந்து ரபேல் விமானங்களை வாங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. மக்களவை தேர்தலிலும் ரபேல் விவகாரம் முக்கிய விவாதப் பொருளாக வாய்ப்புள்ளதாக கருதப்படும் நிலையில் முக்கியமான அறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com