டெல்லியை அதிர வைத்த ரஃபியா சைஃபி கொலை: நடந்தது என்ன?

டெல்லியை அதிர வைத்த ரஃபியா சைஃபி கொலை: நடந்தது என்ன?
டெல்லியை அதிர வைத்த ரஃபியா சைஃபி கொலை: நடந்தது என்ன?
டெல்லியில் பெண் காவல் அதிகாரி ஒருவர், கும்பலால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி காவல் துறையில் பணியாற்றி வந்த பெண், ரஃபியா சைஃ பி (வயது 21). நான்கு மாதங்களுக்கு முன்புதான் பணியில் சேர்ந்தார். இந்நிலையில், ரஃபியா கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் ஒரு மர்ம கும்பலால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. பின்னர், அவரை கொலை செய்ததாக நிஜாமுதீன் என்பவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில், நிஜாமுதீனுக்கும் ரஃபியா சைஃபிக்கும் திருமணம் நடைபெற்றாகவும், திருமணத்தை ரஃபியாவின் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையில், அவர்கள் இருவரும் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இடையில் அவர்களிடையே ஏற்பட்ட தகராறில் ரஃபியா கொலை செய்யப்பட்டதாகவும் நிஜாமுதீன் கூறியதாக காவல் துறையினர் கூறுகின்றனர்.
ஆனால், இந்த குற்றசாட்டுகளை ஏற்க மறுத்துள்ள உறவினர்கள், ரஃபியா பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கின்றனர். இது குறித்து உறவினர்கள் கூறுகையில், “குற்றஞ்சாட்டப்பட்ட நிஜாமுதீன், ரஃபியாவின் நண்பர் ஆவார். அவர் சம்பவத்தன்று தனது 4 நண்பர்களுடன் ரஃபியாவை பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்தி இருக்கிறார். இதை அவர் வெளியில் கூறிவிடுவார் என்ற பயத்தில் அவர்கள் ரஃபியாவை கொலை செய்துள்ளார்கள். ரஃபியாவின் மார்பகங்கள் இரண்டும் அறுக்கப்பட்டுள்ளது. உடலில் பல இடங்களில் காயங்கள் உள்ளது. அவரின் அந்தரங்க உறுப்புக்கள் சிதைக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் காவல் துறையினர் உரிய விசாரணை மேற்கொண்டு உண்மையை கண்டறிய வேண்டும்” என்று கூறுகின்றனர். இது தொடர்பாக ட்விட்டரில் பலரும் #JusticeForRabiyaஎன்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com