திறம்பட பணியாற்றாவிட்டால் வெளியேறுங்கள்! BSNL ஊழியர்களுக்கு மத்திய அமைச்சர் எச்சரிக்கை!

திறம்பட பணியாற்றாவிட்டால் வெளியேறுங்கள்! BSNL ஊழியர்களுக்கு மத்திய அமைச்சர் எச்சரிக்கை!
திறம்பட பணியாற்றாவிட்டால் வெளியேறுங்கள்! BSNL ஊழியர்களுக்கு மத்திய அமைச்சர் எச்சரிக்கை!

திறம்பட பணியாற்றுங்கள்! அவ்வாறு பணியாற்ற முடியாவிட்டால் வெளியேறுங்கள் என்று பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தனியார் நிறுவனங்களுடன் போட்டியிட முடியாமல் திணறி வரும் பிஎஸ்என்எல் பொதுத்துறை நிறுவனத்தின் உயரதிகாரிகள் கூட்டத்தில் இதை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஒப்படைக்கப்பட்ட பணியை திறம்பட செய்து நிறுவனத்தை சிறப்பாக உயர்த்த வேண்டும், தவறினால் வெளியேறத் தயாராக இருக்க வேண்டும் என அஸ்வினி வைஷ்ணவ் பேசியுள்ளார். “சர்க்காரி” மனப்பான்மையை கைவிட்டு ஊழியர்கள் பணியாற்ற வேண்டும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களை எதிர்த்து கடுமையாக போராட வேண்டும் என்று அவர் தெரிவித்தார். “வேலை செய்யாதவர்கள் ஓய்வு பெற்றுக்கொண்டு வீட்டுக்குச் செல்லாலாம். விஆர் எஸ் எடுப்பதில் எதிர்ப்பைக் காட்டினால் முன்கூட்டியே ஓய்வு பெற வழிவகுக்கும் 56ஜே விதியைப் பயன்படுத்துவோம்” என்று கடுமையான பேசினார் அமைச்சர். 62 ஆயிரம் ஊழியர்களைக் கொண்ட பிஎஸ்என்எல் நிறுவனத்தை சரிவில் இருந்து மீட்க ஒரு லட்சத்து 64 ஆயிரம் கோடி நிதியுதவி திட்டத்தை அண்மையில் மத்திய அரசு அறிவித்த நிலையில், அமைச்சரின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com