இந்தியா
ஆட்டுக்குட்டியை முழுங்கி நகராமல் கிடந்த மலைப்பாம்பு
ஆட்டுக்குட்டியை முழுங்கி நகராமல் கிடந்த மலைப்பாம்பு
அசாம் அருகே ஆட்டுக்குட்டியை முழுங்கி நகரமுடியாமல் கிடந்த மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டு காட்டில் விட்டனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத் தளங்களில் பரவி வருகிறது.
அசாமில் உள்ள பைஹாதா சரியலி கிராமத்தில் சமார் 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு நுழைந்து அங்கிருந்த ஆட்டு குட்டியை விழுங்கியுள்ளது. ஆட்டை விழுங்கிய இந்த பாம்பு வயிறு வீங்கிய நிலையில், நகர முடியாமல் கிடந்துள்ளதை கண்ட கிராமத்தினர், அதன் தலை பகுதியை கயிற்றால் கட்டியுள்ளனர். பின்னர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், அந்தப் பாம்பை காட்டில் விடுவதற்காக வாகனத்தில் ஏற்றி சென்றனர். இதை படம் பிடித்த சிலர், இந்த வீடியோ காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.