காமன்வெல்த் தொடர்: முதல் முறையாக தங்கம் வென்று பி.வி.சிந்து சாதனை

காமன்வெல்த் தொடர்: முதல் முறையாக தங்கம் வென்று பி.வி.சிந்து சாதனை
காமன்வெல்த் தொடர்: முதல் முறையாக தங்கம் வென்று பி.வி.சிந்து சாதனை

காமன்வெல்த் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தங்கப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் கடந்த 28-ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் 72 நாடுகளைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இன்றுடன் இந்த விளையாட்டு போட்டிகள் நிறைவடைய உள்ளநிலையில், பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் நம்பர் ஒன் வீராங்கனையான பி.வி.சிந்து, கனடாவின் மிச்செல்லி ஆகியோர் களம் கண்டனர்.

இந்த இறுதிப் போட்டியில் கனடா வீராங்கனை மிச்செல்லியை 21-15, 21-13 ஆகிய நேர் செட்களில் வெற்றிபெற்று பி.வி.சிந்து இந்தியாவிற்கு தங்கம் வென்று கொடுத்துள்ளார். காமன்வெல்த் வரலாற்றில் முதல் முறையாக ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றுள்ளார் பி.வி.சிந்து.

கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் தொடரில் கலப்பு ஆட்டத்தில் தங்கம் வென்று இருந்தார் பி.வி.சிந்து. பி.வி. சிந்து ஒற்றையர் பிரிவில் கடந்த முறை வெள்ளி வென்ற நிலையில் தற்போது தங்கம் வென்றுள்ளார். தங்கம் வென்றது மூலம் பதக்கம் பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளது இந்தியா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com