\
நாடு திரும்பினார் சாதனை சிந்து, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

நாடு திரும்பினார் சாதனை சிந்து, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

நாடு திரும்பினார் சாதனை சிந்து, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
Published on: 

உலக பேட்மின்டன் போட்டியில் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஸ்விட்சர்லாந்தில் இருந்து நாடு திரும்பினார். 

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டன் இறுதிப்போட்டியில், ஜப்பானின் நசோமி ஒகுஹாராவை வீழ்த்தி பி.வி.சிந்து, சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டனில் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். 

இதையடுத்து அவர் சுவிட்சர்லாந்தில் இருந்து இன்று அதிகாலை தாயகம் திரும்பினார். டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கிய சிந்துவுக்கு, ரசிகர்களும், அவரது நண்பர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய சிந்து, நாட்டுக்காக மேலும் பல்வேறு பதக்கங்களைக் குவிக்க உறுதி பூண்டி ருப்பதாகவும், தமக்கு ஆதரவு அளித்த ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.


 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com