நிறைவேறியது இந்தியா-ரஷ்யா இடையேயான 70 ஆயிரம் கோடி ஒப்பந்தம்

நிறைவேறியது இந்தியா-ரஷ்யா இடையேயான 70 ஆயிரம் கோடி ஒப்பந்தம்

நிறைவேறியது இந்தியா-ரஷ்யா இடையேயான 70 ஆயிரம் கோடி ஒப்பந்தம்
Published on

அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி ரஷ்யாவுடன் இந்தியா ஏவுகணை, ராணுவ தளவாடங்கள் மற்றும் துப்பாக்கி தொழிற்சாலை உள்ளிட்ட ஒப்பந்தங்களை செய்துள்ளது.

ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்கள் வாங்கக் கூடாது என இந்தியாவுக்கு அமெரிக்கா மறைமுக எச்சரிக்கை விடுத்த நிலையில், அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி இந்தியா-ரஷ்யா இடையே நெடுநாட்களாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணையை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்‌தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. 

தனக்கு எதிராக செயல்படும் நாடுகளை தடைகள் மூலம் நெருக்கடி கொடுக்கும் வகையில் 'காட்சா' என்ற சட்டத்தை அமெரிக்கா அமல்படுத்தியது. இந்தச் சட்டத்தின்படி ஈரான், வடகொரியா, ரஷ்யா ஆகிய நாடுகளுடன் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் நாடுகள் மீது கடுமையான பொருளாதார தடை விதிக்கப்படும் என்றும் குறிப்பாக ரஷ்யாவின் எண்ணெய் வளத்துறை, பாதுகாப்புத்துறை மற்றும் நிதித்துறையின் மீதும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா எச்சரித்தது.

இந்நிலையில் ரஷ்ய அதிபர் புடின், இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று இந்தியா வந்த அவரை இந்திய வெளிவுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வரவேற்றார். இதனையடுத்து, ரஷ்ய அதிபர் புடினை பிரதமர் மோடி தனது இல்லத்திற்கு அழைத்து பேசினார். அலுவலக ரீதியாக அல்லது தனிப்பட்ட முறையில் பிரதமர் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. 

இதனையடுத்து, இன்று டில்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் ரஷ்ய அதிபர் புடின், பிரதமர் மோடி இருவரும் சந்தித்து பேசினர். இந்தச் சந்திப்பை தொடர்ந்து இந்தியா-ரஷ்யா இடையே நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் ரஷ்யாவிடமிருந்து ஐந்து எஸ்-400 ரக ஏவுகணைகள் வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.

மேலும், ரஷ்யாவிடமிருந்து விண்வெளித்துறையில் ஒத்துழைப்பு, ராணுவ தளவாடங்கள், துப்பாக்கி தொழிற்சாலை தொடர்பான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. இதனையடுத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை அதிபர் புடின் சந்திக்கவுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com