\
புதிய தலைமுறை
புதிய தலைமுறைபுதிய தலைமுறை

'குரலற்றவர்களின் குரல்'- 14ஆம் ஆண்டில் புதிய தலைமுறை- தலைவர்கள் வாழ்த்து

உண்மை உடனுக்குடன் என்ற தாரக மந்திரத்துடன் தொடங்கப்பட்ட புதிய தலைமுறை தொலைக்காட்சி இன்று 14-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
Published on: 

உண்மை உடனுக்குடன் என்ற தாரக மந்திரத்துடன் தொடங்கப்பட்ட புதிய தலைமுறை தொலைக்காட்சி இன்று 14-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

குரலற்றவர்களின் குரலாக, சமரசமின்றி களமாடும் உங்கள் புதிய தலைமுறை, உலக தமிழர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. மக்களின் நம்பிக்கையை தொடர்ந்து கட்டிக்காப்போம் என்ற உறுதியுடன் இனி வரும் காலங்களிலும் புதிய தலைமுறை தனது பயணத்தை தொடரும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.

தொடங்கிய நாள் முதல் தற்போது வரை புதிய தலைமுறை முன்னெடுத்த ஒவ்வொரு பணிகளிலும் ஆதரவை வழங்கிய மக்களாகிய உங்கள் அனைவருக்கும் புதிய தலைமுறை குடும்பத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறோம்.

இந்தவகையில், 14 ஆண்டுகளாக புதிய தலைமுறையின் மறக்க முடியாத பயணங்கள் உங்களுக்காக...

மேலும், 14 ஆண்டின் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்திருக்கும் புதிய தலைமுறை, செய்தி துறையில் ஆற்றிய உன்னத்தப்பணிகள் பலவற்றை பல்வேறு தரப்பினர் நினைவுக்கூர்ந்து, தங்களின் அன்பு கலந்த வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com