புனித பூஜை நடத்திய ஐயப்பன் கோயில் தந்திரிக்கு எஸ்.சி, எஸ்.டி கமிஷன் நோட்டீஸ்!

புனித பூஜை நடத்திய ஐயப்பன் கோயில் தந்திரிக்கு எஸ்.சி, எஸ்.டி கமிஷன் நோட்டீஸ்!
புனித பூஜை நடத்திய ஐயப்பன் கோயில் தந்திரிக்கு எஸ்.சி, எஸ்.டி கமிஷன் நோட்டீஸ்!

ஐம்பது வயதுக்கு கீழ் உள்ள பெண்கள் வழிபட்டதால், சபரிமலையில் புனித பூஜை செய்த தந்திரிக்கு கேரள மாநில எஸ்.சி, எஸ்.டி ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து கேரளாவில் போராட்டங்கள் நடந்து வந்தன. இந்நிலையில், அம்மாநிலத்தைச் சேர்ந்த கனகதுர்கா (44), பிந்து (42) ஆகிய பெண்கள் பலத்த பாதுகாப்புடன் கடந்த 2 ஆம் தேதி சபரிமலையில் சாமி தரிசனம் செய்தனர். இருவரும் 50 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்பதால் இது, பரபரப்பை
ஏற்படுத்தியது. 

இந்நிலையில் கோயிலுக்குள் இரண்டு பெண்கள் நுழைந்ததைத் தொடர்ந்து, கோவிலை புனிதப்படுத்தும் பூஜை நடத்தப்பட்டது. சபரிமலை தந்திரி, புனித பூஜை நடத்தியது குறித்து, கேரள தேவசம் போர்டு விளக்கம் கேட்டுள்ளது. "புனித பூஜை உச்சநீதிமன்ற உத்தரவுக்கு
எதிரானது. அது குறித்து தந்திரியிடம் விளக்கம் கேட்டுள்ளோம். அவரது விளக்கத்தை கேட்டபின், அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் ஏற்கனவே தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், கேரள பட்டியலின மற்றும் பழங்குடியின ஆணையம் (Scheduled Castes & Scheduled Tribes) இதுபற்றி ஆணையத்தில் விளக்கம் அளிக்க, தந்திரியை அழைத்திருந்தது. கடந்த 17 ஆம் தேதி அவர் ஆஜராகி இருக்க வேண்டும். அவர் வராததால், ’உங்கள் மேல் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது’ என்று கேட்டு அந்த ஆணையம் ’ஷோகாஸ் நோட்டீஸ்’ அனுப்பியுள்ளது.

இதை உறுதி செய்த அந்த ஆணையத்தின் உறுப்பினர், எஸ். அஜய்குமார், ’’சபரிமலையில் சாமி தரிசனம் செய்த பெண்களில் ஒருவர் பட்டிய லினத்தைச் சேர்ந்தவர். தந்திரி, கோயிலை புனிதப்படுத்தும் பூஜை செய்தது, தீண்டாமையைதான் காட்டுகிறது’’ என்று முகநூலில் தெரிவித் துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com