ஆஸ்திரேலியாவில் சாலை விபத்து - பிரபல பஞ்சாபி பாடகர் நிர்வைர் சிங் உயிரிழப்பு

ஆஸ்திரேலியாவில் சாலை விபத்து - பிரபல பஞ்சாபி பாடகர் நிர்வைர் சிங் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவில் சாலை விபத்து - பிரபல பஞ்சாபி பாடகர் நிர்வைர் சிங் உயிரிழப்பு

பிரபலமான பஞ்சாபி பாடகரான நிர்வைர் சிங் கார் விபத்தில் பலியானார்.

இளம் பஞ்சாபி பாடகரான நிர்வைர் சிங், 9 ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியா சென்று அங்கு தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். 'மை டர்ன்' ஆல்பத்தின் 'தேரே பினா' என்ற பாடல் மூலம் இவர் மிகவும் பிரபலமானார். இந்நிலையில் நிர்வைர் சிங் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 3.30 மணியளவில் ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.

டிகர்ஸ் ரெஸ்டின் புறநகர் பகுதியில் 3 கார்கள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து ஏற்பட காரணம் முன்னதாக சென்ற ஒரு கார்தான் என்கின்றனர் போலீசார். அந்த காரை தவறாக சென்ற காரில் இருந்த ஒரு பெண்ணும் ஒரு ஆணும் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டனர். இந்த கார் விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் பஞ்சபி பாடகர் நிர்வைர் சிங். இந்த விபத்து குறித்த போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

நிர்வைர் சிங் கடைசியாக 3 ஆண்டுகளுக்கு முன்னர் 'ஹிக் தோக் கே' என்ற பாடலை பாடகர் குர்லேஜ் அக்தருடன் இணைந்து பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் நண்பரான ககன் கோக்ரி தனது இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் நிர்வைர் சிங் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதையும் படிக்க: அதிருப்தியில் ரசிகர்கள் வைத்த விமர்சனங்கள்... அதிரடி முடிவெடுத்த விக்ரமின் கோப்ரா படக்குழு

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com