இந்தியா
1 முதல் 10-ஆம் வகுப்பு வரை பஞ்சாபி மொழி கட்டாயப் பாடம்: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு
1 முதல் 10-ஆம் வகுப்பு வரை பஞ்சாபி மொழி கட்டாயப் பாடம்: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு
பஞ்சாபில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் பஞ்சாபி மொழி கட்டாயப் பாடமாக்கப்பட்டுள்ளது என்று பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, “ இந்த அறிவிப்பை மீறும் பள்ளிகளுக்கு 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். மாநிலத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களில் பஞ்சாபி மொழி கட்டாயம். மேலும், மாநிலத்தில் உள்ள அனைத்து பெயர் பலகைகளிலும் மேலே பஞ்சாபி மொழியில் எழுதப்படவேண்டும்” எனத் தெரிவித்தார்.