கணவர் கொடுத்த திருமணநாள் பரிசு தொகை.. அடித்தது ஜாக்பாட்! கோடீஸ்வரியாகிய ’லக்கி’ மனைவி!

திருமணநாளுக்கு தனது கணவர் கொடுத்த பரிசு தொகையின் மூலம் கோடீஸ்வரராகியுள்ளார் பஞ்சாபை பூர்வீகமாக கொண்ட பெண் ஒருவர்.
பஞ்சாப்
பஞ்சாப்முகநூல்

திருமணநாளுக்கு தனது கணவர் கொடுத்த பரிசு தொகையின் மூலம் கோடீஸ்வரராகியுள்ளார் பஞ்சாபை பூர்வீகமாக கொண்ட பெண் ஒருவர்.

பஞ்சாபை பூர்வீகமாக கொண்டவர் பயல் வயது 42. இவருக்கு திருமணமாகி ஹர்னீக் சிங் என்ற கணவரும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். பயலுக்கு ஒவ்வொரு ஆண்டும் அவரின் கணவர் ஹர்னீக் சிங், பரிசு தொகை கொடுப்பது வழக்கம் அப்படி ஒவ்வொரு ஆண்டும் வரும் பரிசு தொகை மூலம் பயல் லாட்டரி டிக்கெட் வாங்குவது வழக்கம்.

அப்படி, ஒவ்வொரு முறை லாட்டரி வாங்கும்போதும் 3 என்ற எண் அதிக முறை வருவதை உறுதி செய்த பயல், 3தான் தனது லக்கி எண் என்று உறுதி செய்துள்ளார். இதன்படி, வழக்கம் போல பயலுக்கும் ஹர்னீக் சிங்கிற்கு தங்களின் 16 ஆவது திருமண நாள் ஏப்ரல் 20 அன்று  வந்துள்ளது. எப்போதும்போல, ஹர்னீக்கும் பரிசுத்தொகை கொடுக்கவே, அதன்மூலம் துபாய் டியுட்டி ஃபிரீ டிரா லாட்டரி டிக்கெட்டை தனது ராசி எண்ணான மே 3 ஆம் தேதி அன்று ஆன்லைனில் வாங்கியுள்ளார் பயல்.

பஞ்சாப்
1976 முதல் 2024 வரை.. ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிரபலங்கள் மற்றும் தலைவர்கள்

கடந்த 12 வருடங்களாக பயலுக்கு அடிக்காத அதிர்ஷ்டமழை இந்த வருடம் அடித்ததை போல ரூ.1 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ 8 கோடி ரூபாயை பரிசு தொகையாக பெற்றுள்ளார் பயல்.

வருடா வருடம் தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளின் பெயரில் மாற்றி மாற்றி லாட்டரி வாங்குவதாக தெரிவித்துள்ள பயல், இந்த லாட்டரில் கிடைத்த தொகையை வைத்து குழந்தைகளின் கல்வி செலவிற்கு பயன்படுத்த போவதாக தெரிவித்துள்ளார். இதன்மூலம் 1 மில்லியன் டாலர் பணத்தை லாட்டரி டிக்கெட்டில் வென்ற 229 ஆவது இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com