விபத்தில் ரயில் எஞ்ஜினை கிழித்துச் சென்ற லாரி: எஞ்ஜின் டிரைவர் பலி

விபத்தில் ரயில் எஞ்ஜினை கிழித்துச் சென்ற லாரி: எஞ்ஜின் டிரைவர் பலி

விபத்தில் ரயில் எஞ்ஜினை கிழித்துச் சென்ற லாரி: எஞ்ஜின் டிரைவர் பலி
Published on

பஞ்சாபில் டிப்பர் லாரி மீது ரயில் மோதியதில் என்ஜின் டிரைவர் உயிரிழந்தார். 

பாஞ்சாப் மாநிலம் ஃபசில்கா மாவட்டத்தில் உள்ள ஃபெரோஸ்பூரை நோக்கி ரயில் சென்றது. அப்போது ஆளில்லா லெவல் கிராசிங்கில் வந்த சிமென்ட் கான்கிரீட் கலவை இயந்திர லாரி மீது ரயில் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் ரயில் எஞ்ஜினின் முன்பகுதியை கிழித்துக் கொண்டு டிப்பர் லாரி புகுந்தது. இதில் ரயில் என்ஜின் டிரைவர் விகாஸ் கைய்பி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அத்துடன் லாரியும் உருக்குலைந்து நசுங்கியது. இந்த விபத்தில் ரயில் தடம்புரளாததால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே மீட்புக் குழுவினர், மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com