கள்ளச்சாராயம் காய்ச்சினால் தூக்குத் தண்டனை... பஞ்சாப் அரசு முடிவு

கள்ளச்சாராயம் காய்ச்சினால் தூக்குத் தண்டனை... பஞ்சாப் அரசு முடிவு
கள்ளச்சாராயம் காய்ச்சினால் தூக்குத் தண்டனை... பஞ்சாப் அரசு முடிவு
விஷ சாராய வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் மாநில கலால் சட்டத்தை திருத்த மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. 

பஞ்சாப்பின் அமிர்தசரஸ், குர்தாஸ்பூர், தரன் போன்ற மாவட்டங்களில் கடந்த ஆண்டு ஜூலையில் விஷ சாராயம் குடித்து ஏராளமானோர் உயிரிழந்தனர். இவ்வாறு அடிக்கடி நடக்கும் இந்த சம்பவங்களை தடுக்கும் வகையில் சட்டத்தை கடுமையாக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
அந்த வகையில் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் விஷ சாராய வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் மாநில கலால் சட்டத்தை திருத்த மாநில அமைச்சரவை நேற்று முடிவு செய்தது. இந்த சட்டப்படி உயிரிழப்புகளை ஏற்படுத்தும் விஷ சாராய வழக்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அல்லது வாழ்நாள் சிறை விதிக்கப்படும். அத்துடன் ரூ.20 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
பஞ்சாபில் கடந்த ஆண்டில் விஷ சாராயம் குடித்ததில் அமிர்தசரஸ், படாலா மற்றும் டார்ன்தரன் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த 111 பேர் பலியாகினர். அந்தச் சம்பவத்தை தொடர்ந்து கள்ளச்சாராயம் வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தத்தை கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதாக பாஞ்சாப் மாநில அமைச்சரவை தெரிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com