கொரோனா பாதித்த ஏழை குடும்பங்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் தொகுப்பு: பஞ்சாப் முதல்வர்

கொரோனா பாதித்த ஏழை குடும்பங்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் தொகுப்பு: பஞ்சாப் முதல்வர்
கொரோனா பாதித்த ஏழை குடும்பங்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் தொகுப்பு: பஞ்சாப் முதல்வர்

பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா பாதித்த ஏழை குடும்பங்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் தொகுப்பு வழங்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் தெரிவித்தார்

பஞ்சாபில் கொரோனா பாதித்த ஏழை குடும்பங்களுக்கு இலவச ரேஷன் பைகளை மாநில அரசு விநியோகிக்கத் தொடங்கியுள்ளது. இதுவரை ஒரு லட்சம் பைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், தேவைப்பட்டால் அரசு மேலும் தயார் செய்யும் என்றும் பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் கூறினார்.

"கொரோனா பாதித்த ஏழை குடும்பங்களுக்கு 10 கிலோ கோதுமை மாவு, இரண்டு கிலோ சர்க்கரை மற்றும் இரண்டு கிலோ கொண்டைகடலை அடங்கிய உணவு ரேஷன் பைகளை விநியோகிக்கத் தொடங்கியுள்ளோம். இப்போது ஒரு லட்சம் பைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் நாங்கள் இன்னும் தயார் செய்வோம். மக்கள் தங்களை கவனித்துக் கொண்டு வீட்டிலேயே இருக்கவேண்டும் "என்று முதல்வர் அமரீந்தர் சிங் ட்வீட் செய்துள்ளார்.

பஞ்சாபில் தற்போது  53,426 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாநிலத்தில் இதுவரை 8,772 இறப்புகள் பதிவாகியுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com