\
விவசாய மசோதாக்களை எதிர்த்து பஞ்சாப் விவசாயிகள் பேரணி - எல்லைகளை மூடிய ஹரியானா போலீஸார்

விவசாய மசோதாக்களை எதிர்த்து பஞ்சாப் விவசாயிகள் பேரணி - எல்லைகளை மூடிய ஹரியானா போலீஸார்

விவசாய மசோதாக்களை எதிர்த்து பஞ்சாப் விவசாயிகள் பேரணி - எல்லைகளை மூடிய ஹரியானா போலீஸார்
Published on

வேளாண் மசோதாக்களை எதிர்த்து பஞ்சாப் மாநில விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியாக செல்ல முற்பட்ட நிலையில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

ஹரியானா மாநிலம் அம்பாலா வழியாக பேரணியாக சென்ற விவசாயிகளை காவல் துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கலைத்தனர். இதற்கிடையில் பஞ்சாப் விவசாயிகள் தங்கள் மாநிலத்திற்குள் நுழையாமல் இருக்க ஹரியானா மாநில அரசு தனது எல்லைகளை மூடியது. இதுதவிர பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவையும் ஹரியானா அரசு பிறப்பித்துள்ளது.

இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எத்தனை தடைகள் வந்தாலும் தாங்கள் டெல்லி சென்றே தீருவோம் என விவசாய அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com