பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் கிழக்கு சட்டமன்ற தொகுதியில், காங்கிரஸ் கட்சி சார்பாகப் போட்டியிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்து முன்னணியில் இருக்கிறார்.
இவர், பாஜக வேட்பாளர் ராஜேஷ் குமார் ஹனியை விட அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இதனால் அவர் வெற்றிபெறுவது உறுதியாகியுள்ளது.
பாஜக நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்த சித்து, கடந்த ஆண்டு பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.