பஞ்சாப் முதல்வரின் மனைவி, மகன், மருமகளுக்கு கொரோனா பாதிப்பு

பஞ்சாப் முதல்வரின் மனைவி, மகன், மருமகளுக்கு கொரோனா பாதிப்பு

பஞ்சாப் முதல்வரின் மனைவி, மகன், மருமகளுக்கு கொரோனா பாதிப்பு
Published on

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி குடும்பத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் உள்ளதாக அம்மாநில மூத்த சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மொஹாலி மூத்த சுகாதாரத்துறை அதிகாரியான மருத்துவர் ஆதர்ஷ்பால் கவுர் தெரிவிக்கையில், ‘பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் மனைவி கமல்ஜித், மகன் நவ்ஜித் சிங் மற்றும் மருமகள் சிம்ராந்தீர் கவுர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர்கள் மூவரும் லேசான அறிகுறிகளுடன், தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால், முதல்வருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு தொற்று இல்லை என்று வந்துள்ளது” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முன்னதாக கடந்த 5-ம் தேதி, பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பங்கேற்று சுமார் 42,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க இருந்தநிலையில், மோசமான வானிலை காரணமாக, ஹெலிகாப்டர் பயணம் ரத்துசெய்யப்பட்டு, சாலைப் பயணம் மேற்கொண்டார். பிரதமர் மோடியின் வாகனம், நிகழ்ச்சி நடைபெற இருந்த ஹுசைனிவாலாவை சென்றடைய 30 கி.மீ. தூரம் இருந்தபோது, வழியில் போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தனர். இதனால் பதிண்டா என்ற இடத்தில், பிரதமரின் கான்வாய், மேம்பாலத்தில் சுமார் 20 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டிவந்தது. 

பிறகு, பாதுகாப்பு குளறுபடி காரணமாக பிரதமர் மோடி பங்கேற்க இருந்த அந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. இந்தச் சம்பவத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட பல்வேறு பா.ஜ.க. தலைவர்கள் பஞ்சாப் அரசையும், காங்கிரஸையும் கடுமையாக விமர்சித்த வந்தனர். 

ஆனால், இந்த குற்றச்சாட்டை மறுத்து பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி விளக்கம் தந்தார். "தங்கள் மீது எந்த தவறும் இல்லை, இது பாஜகவின் திட்டமிடப்பட்ட செயல், பாதுகாப்பு குறைபாடுகளும் எதுவும் இல்லை. முதலில் நான் நான் பிரதமரை சந்திக்க திட்டமிட்டிருந்தேன். ஆனால், என்னுடைய செயலருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. மேலும் சிலருக்கும் கொரோனா உறுதியானதால், நான் தனிமைப்படுத்தி கொண்டிருந்தேன். அதனால்தான், பிரதமரை வரவேற்க என்னால் நேரில் செல்ல முடியாமல் போயிற்று” என்று அவர் கூறியிருந்தார். இந்நிலையில்தான், பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் குடும்பத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com