இந்தியா
பஞ்சாப், கோவா சட்டப்பேரவைத் தேர்தல்.. விறுவிறு வாக்குப்பதிவு
பஞ்சாப், கோவா சட்டப்பேரவைத் தேர்தல்.. விறுவிறு வாக்குப்பதிவு
பஞ்சாப், கோவா மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
பஞ்சாப் சட்டப் பேரவையில் உள்ள 117 தொகுதிகளுக்கும், கோவா சட்டப் பேரவையில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரையிலும் நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாகவே வாக்குச்சாவடிக்கு வந்த வாக்காளர்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். வாக்குப்பதிவையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோவா மற்றும் பஞ்சாப் மாநில தேர்தல் முடிவுகள் மார்ச் மாதம் 11-ம் தேதி வெளியாகும்.