துப்பாக்கி முனையில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - போலீஸ் மீதே வழக்குப்பதிவு

துப்பாக்கி முனையில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - போலீஸ் மீதே வழக்குப்பதிவு

துப்பாக்கி முனையில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - போலீஸ் மீதே வழக்குப்பதிவு

பஞ்சாப் மாநிலத்தில், துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸ் அதிகாரி மீது சட்டக் கல்லூரி மாணவி புகார் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சண்டிகரில் கிரிமினல் பிரிவில் உதவி இன்ஸ்பெக்டர் ஜெனரலாக பணியாற்றுபவர் ரன்தீர் சிங் உப்பல். போலீஸ் அதிகாரியான ரன்தீர் சிங் மீது அமிர்தசரஸில் படிக்கும் 26 வயது சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். 6 வயது குழந்தைக்கு தாயான அந்த மாணவி அளித்த புகாரில், “கடந்த சில மாதங்களாக ரன்தீர் சிங் எனக்கு தொடர்ச்சியாக போன் செய்தார். தன்னுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள என்னை கட்டாயப்படுத்தினார். துப்பாக்கி முனையில் என்னை மிரட்டி இரண்டு முறை பாலியல் வன்கொடுமை செய்தார்” என்று அந்தப் புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.

மேலும், போலீஸ் அதிகாரி தன்னுடைய தாய்க்கு தெரிந்தவர் என்று தெரிவித்துள்ள அந்த மாணவி தன்னுடைய புகார் தொடர்பான வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களையும் இணைத்து போலீஸ் ஐஜிக்கு அனுப்பியுள்ளார்.

சட்டக்கல்லூரி மாணவி அளித்த புகாரின் பேரில் போலீஸ் அதிகாரி ரன்தீர் சிங் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து கூடுதல் துணை கமிஷனர் லக்பிர் சிங் கூறுகையில், “சட்டக் கல்லூரி மாணவி, ரன்தீர் சிங் மீது புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரினை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தோம். உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு எங்களுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. அந்த அறிக்கையின் அடிப்படையில் நாங்கள் வழக்குப் பதிவு செய்துள்ளோம். சட்டக்கல்லூரி மாணவி அளித்த புகார் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளோம். ரன்தீர் சிங் குற்றம் செய்யதது உறுதி செய்யப்பட்டால் அவர் நிச்சயம் கைது செய்யப்படுவார்” என்றார்.

இதனிடையே, தன்மீதான பாலியல் புகாரை போலீஸ் அதிகாரி ரன்தீர் சிங் மறுத்துள்ளார். மேலும், குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என்றும் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com